Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் விவகாரம்: பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2025      இந்தியா
parlie

Source: provided

புதுடெல்லி: தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க.  துணைப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க.  எம்.பிக்கள் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவதை நிறுத்தவும், இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்படகுகளையும் விடுவிக்க வழி செய்யும் வகையில், உடனடியாக உயர்மட்ட தூதரக நடவடிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

மீனவர்களின் கைதுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!! தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்!! என முழக்கமிட்டு மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, மீனவர் பிரச்சனை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க.  பாராளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி நோட்டீஸ் அளித்துள்ளார். அதில் , இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு மட்டும் இலங்கை கடற்படையால் 530 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டு 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை சிறைகளில் தற்போது 97 மீனவர்கள் உள்ளனர்; தமிழ்நாட்டைச் சேர்ந்த 216 படகுகள் இலங்கை வசம் உள்ளது. மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து