Idhayam Matrimony

போதைப்பொருள் விவகாரம்: தமிழ்நாடு அரசு விளக்கம்

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : போதைப்பொருள் விவகாரத்தில் தமிழக பா.ஜனதா தலைவர்  அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் கீழ்   கடந்த 3 ஆண்டுகளில் 1,122 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் 2022, 2023 மற்றும் 2024 ஆகிய 3 ஆண்டுகளில் போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் கீழ் 31 ஆயிரத்து 946 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 48 ஆயிரத்து 698 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதாவது 2022-ம் ஆண்டு 10 ஆயிரத்து 665 வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 ஆயிரத்து 325 பேரும், 2023-ம் ஆண்டு 10 ஆயிரத்து 256 வழக்குப்பதிவு செய்யப்பட்டு 14 ஆயிரத்து 470 பேரும், 2024-ம் ஆண்டு 11 ஆயிரத்து 25 வழக்கு பதிவு செய்யப்பட்டு 17 ஆயிரத்து 903 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து