Idhayam Matrimony

டெல்லி சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத காங்கிரஸ் கட்சி

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2025      இந்தியா
delhi 2025-01-21

Source: provided

புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 70 இடங்களில்  48 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சி  22 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

1998-2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கடந்த இரு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும்(2015, 2020) காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளிலும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியைக்கூட பெறாது அல்லது ஒன்றிரண்டு தொகுதிகளுக்கு மட்டுமே வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து