எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புது டில்லி: புது டில்லியில் ஆம் ஆத்மி தோல்விக்கு, அக்கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைக்காததே காரணம் என்று கூறப்படுகிறது.
டெல்லி சட்டமன்றத்துக்கு கடந்த 5-ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 70 இடங்களில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா தோல்வியை தழுவினர். தற்போதைய முதல்வர் ஆதிஷி வெற்றி பெற்றார்.
தலைநகர் டில்லியை ஆம் ஆத்மி இழந்ததற்குக் காரணம் காங்கிரஸ் என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் ஒன்றாக இணைந்து போட்டியிட்டிருந்தால், தலைநகர் டில்லியில் வெற்றியை பதிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தக் கூட்டணிக்கு 49 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்காததால், காங்கிரஸ் கட்சிக்கு என்ன நஷ்டம் என்று பிறகு கணக்கிட்டுக்கொள்ளலாம். ஆனால், ஆம் ஆத்மிக்கு ஒட்டுமொத்த தலைநகர் டில்லியுமே நஷ்டமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


