எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணியின் புதிய ஜெர்சி அறிமுக நிகழ்ச்சி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
சாம்பியன்ஸ் டிராபி...
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
ரசிகர்கள் ஆர்வம்...
'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் வரும் 20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச் 2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது. இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் புதிய ஜெர்சி...
இந்த தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் தங்களது ஜெர்சிகளை அறிமுகம் செய்து வருகின்றன. ஏற்கனவே இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் தங்களது ஜெர்சிகளை அறிமுகம் செய்து விட்டன. இந்நிலையில், டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணியின் புதிய ஜெர்சி நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது. லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணியின் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அறிமுக நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அணியினர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


