Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2025      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது கூட்டத்தில் விரைவில் தாக்கலாகும் தமிழக பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படுகிறது. பின்னர் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது.

தமிழக சட்டசபை இந்த மாதம் 3-வது வாரம் கூடுகிறது. அப்போது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு 2026-ல் சட்டசபை தேர்தல் வரும் நிலையில், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. 2021-ம் ஆண்டு தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில்,அவற்றுக்கான அறிவிப்புகளையும் இந்த பட்ஜெட்டில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக, அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். எனவே அதற்காக வரும் 10-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,சென்னை தலைமைச் செயலகத்தில்  நாளை காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும். பின்னர் பட்ஜெட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்படும். தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள புதிய தொழில்கள், விரிவாக்கம் செய்யப்பட உள்ள தொழில்கள் ஆகியவற்றிற்கும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து