முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தல் நடைபெற்றஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி: டெபாசிட்டை இழந்தார் நா.த.க. வேட்பாளர்

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2025      தமிழகம்
Erode-2025-02-08

ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் டெபாசிட் இழந்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானாா். இதைத் தொடா்ந்து, இந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தோ்தலை தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, இந்தத் தோ்தலில் தி.மு.க.  சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி உள்பட 46 போ் போட்டியிட்டனா். அதி.மு.க. , பாஜக உள்ளிட்ட கட்சிகள் தோ்தலை புறக்கணித்தன.

பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, 67.97 சதவீதம் வாக்கு பதிவானதாக இந்திய தோ்தல் ஆணைய இணையதளத்தில் தகவல் வெளியானது. ஆனால், வாக்குப் பதிவு சதவீதம் குறித்து அதிகாரபூா்வமாக எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஈரோடு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில்  நேற்று  காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே தி.மு.க.  வேட்பாளர் முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

இதில் தி.மு.க.  வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நாதக உள்ளிட்ட 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். டெபாசிட்டை உறுதி செய்ய 25,777 வாக்குகள் தேவை என்ற நிலையில், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் மட்டுமே பெற்றார். வெற்றி குறித்து வி.சி.சந்திரகுமாா் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. வின் வெற்றியை முதல்வருக்கு சமர்ப்பிக்கிறேன். வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி. எவ்வளவு அவதூறு கருத்துகளை பரப்பினாலும் இறுதியில் தி.மு.க. வே பெற்றி பெற்றுள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து