எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெக்சிகோ சிட்டி, கரீபியன் கடற்பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஹோண்டுராஸுக்கு வடக்கே கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே கரீபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொலம்பியா, கேமன் தீவுகள், கோஸ்டாரிகா, ஜமைக்கா, நிகரகுவா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 0.3 மீ முதல் 1 மீட்டர் வரை உயரம் கொண்ட அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தீவுப்பகுதியில் இருந்து நிலப்பகுதிகளுக்கு செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


