எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன்: அமெரிக்காவில் இரும்பு- அலுமினியத்துக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார்.
இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான நாள் முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுவும் குறிப்பாக வரி விதிப்புகள் மூலம் அவர் புதிய வர்த்தகப் போரை உலக நாடுகள் மீது கட்டவிழ்த்துள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும், ட்ரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளின் எதிரொலியாக உலக நாடுகளின் நாணயங்கள் பல மதிப்பு குறைவது, தங்கம் விலை உயர்வவது போன்ற பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
முன்னதாக மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மெக்சிகோவும் கனடாவும் கடைசி நேரத்தில் புலம்பெயர்வு மற்றும் பெண்டனில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கைத் தொடரும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் கனடாவும், மெக்சிகோவும் கடைசிநேரத்தில் ட்ரம்ப் கோரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் அளித்த நிலையில் வரி விதிப்புக்கு ஒரு மாத காலம் தற்காலிக தடை விதித்தார்.
ப்ளோரிடாவில் இருந்து நியூ ஆர்லியன்ஸுக்கு செல்லும் வழியில் அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ விமானமான ஏர் போர்ஸ் ஒன்றில் இருந்தபடி அவர் அளித்தப் பேட்டியில் இதனை அவர் கூறியுள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் உயர்ந்த வரியை விதித்தால் அமெரிக்காவும் அதிக இறக்குமதி வரி விதிக்கும். சில நாடுகள் நமது பொருட்களுக்கு 130 சதவீதம் வரி விதிக்கின்றன. அவர்களுக்கு நாம் பதில்வரி விதிக்காவிட்டால் அது நியாயமானதாக இருக்காது அல்லவா?. இறக்குமதி வரிகள், அரசாங்கத்தின் பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய உதவும் வருவாய் ஆதாரமாக இருக்கும். எனவே அமெரிக்காவுக்குள் வரும் இரும்பு, அலுமினியத்துக்கு தலா 25 சதவீதம் வரி விதிக்கப்படலாம். இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும். ஒரு பக்கம் வரி அதிகம், மறு பக்கம் வரி குறைவு என்ற போக்கெல்லாம் வேண்டாம். அவர்கள் வரி விதித்தால்; நாமும் வரி விதிப்போம். என்றார். ட்ரம்ப்பின் வரி விதிப்பு அறிவிப்புகளால் அமெரிக்க பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. மேலும், இறக்குமதி வரிவிதிப்புகளால் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்படுகிறது. ஆனால், ட்ரம்ப் கடந்த ஆட்சியை காட்டிலும் இந்த முறை வரி விதிப்புகள் கடுமையை காட்டி வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


