எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மீனவரான நாக சைதன்யா அடிக்கடி கடலுக்கு மீன் பிடிக்க செல்வதை நாயகி சாய் பல்லவி விரும்பவில்லை. அதனால், மீன் பிடிக்கும் தொழிலை விட்டு விடும்படி மன்றாடுகிறார். நாயகியின் பேச்சையும் மீறி நாக சைதன்யா மீன் பிடிக்க சென்று விடுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் அவர்கள் சென்று விடுவதால், பாகிஸ்தான் கடற்படை கைது செய்கிறது. மறுபக்கம் சாய் பல்லவிக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. நாக சைதன்யா பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலையானரா? சாய் பல்லவியை திருமணம் செய்தாரா? இந்த கேள்விக்கான விடைதான் தண்டேல் படம். மீனவராக தன்னை மாற்றிக்கொண்டிருக்கும் நாக சைதன்யா பல பரிணாமங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். காதலுக்காக உருகினாலும், பேச்சை கேட்காமல் போன காதலனை கைவிட முடிவு செய்யும் சாய் பல்லவி, அதே காதலனை காப்பாற்றுவதற்காக போராடுவது என நாயகனுக்கு இணையாக வலம் வருகிறார். ஒளிப்பதிவாளர் ஷ்யாம் தத் பாடல் காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப் படுத்தியிருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு கார்த்திக் தீடா எழுதியிருக்கும் கதையில், சற்று கற்பனையையும் சேர்த்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் சந்து மொண்டேட்டி., மொத்தத்தில், தண்டேலை ஒரு முறை ரசிக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


