எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் மதி அனுபவ அங்காடியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில, மாவட்ட, வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகள், மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள், மதி அங்காடி, மதி இணையதளம், மதி சிறுதானிய உணவகம் மற்றும் இயற்கைச் சந்தைகள் என பல்வேறு செயல்பாடுகள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாக இன்று சுய உதவிக் குழுக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, "மதி அனுபவ அங்காடி" தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் 18.11.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது. மதி அனுபவ அங்காடிக்கு பொதுமக்கள் அளித்த வரவேற்பினைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இரண்டாவது மதி அனுபவ அங்காடியினை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஸ்ரேயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


