எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தங்கம் விலை நேற்றும் அதிகரித்து விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (பிப்.10) பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.63,840-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த டிச.8-ம் தேதிக்கு பிறகு, தங்கம் விலை உயர்ந்து வந்தது. ஜன.3-ம் தேதி ரூ.58,080 ஆகவும், ஜன.16-ம் தேதி ரூ.59,120 ஆகவும் இருந்தது. ஜன.22-ம் தேதி பவுன் தங்கம் ரூ.60 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை சற்று குறைந்திருந்தது.
இருப்பினும், கடந்த 29-ம் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஜன.31-ம் தேதி ஆபணத்தங்கம் ரூ.61 ஆயிரத்தையும், பிப்.1-ம் தேதி ரூ.62 ஆயிரத்தையும் தாண்டியது. நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தங்கம் விலை நேற்றும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 7,980-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.63,840-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் நேற்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.107 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது. ஆபரணத்தங்கம் கடந்த 10 நாட்களில் பவுனுக்கு ரூ.3,360 அதிகரித்துள்ளது. 24 காரட் கொண்ட சுத்தத் தங்கம் விலை ரூ.69,200-க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகை வாங்குவோர் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


