முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள்: இங்கி. வீரர் ஜேக்கப் பெத்தேல் விலகல்

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      விளையாட்டு
England 2024-02-16

Source: provided

லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி, சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் விலகியுள்ளார்.

இந்தியா தொடரை வென்றது...

இந்தியா - இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும் 8 அணிகள் இடையிலான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

ஜேக்கப் பெத்தேல் விலகல்...

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஜேக்கப் பெத்தேல் விலகியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் முடிவில் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்றைய போட்டியில் (2-வது போட்டி) அவர் களமிறங்கவில்லை. காயம் முழுமையாக குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால் அவர் விலகியுள்ளார். இவரது விலகலை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் நேற்று  முன்தினம் போட்டியின் முடிவில் உறுதி செய்தார். இவர் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம் மற்றும் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து