Idhayam Matrimony

வர்த்தகப் போர் பீதியால் மும்பை பங்கு சந்தையில் கடும் சரிவு

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2025      இந்தியா
stock-market 2023 06 28

Source: provided

மும்பை : ட்ரம்பின் அறிவிப்புகளால் வர்த்தகப் போர் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தும் நிப்டி 23,100 புள்ளிகளுக்குக் கீழும் குறைந்து பங்குச்சந்தை நேற்று (பிப். 11) கடும் சரிவுடன் வர்த்தகமானது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று காலை 77,384.98 என்ற புள்ளிகளில் தொடங்கியது.  பிற்பகலில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. வர்த்தக நேர முடிவில் 1,018.20 புள்ளிகள் குறைந்து 76,293.60 புள்ளிகளில் நிறைவு பெற்றது. அதிகபட்சமாக 1,200 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 23,100 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது. வர்த்தக நேர முடிவில், 309.80 புள்ளிகள் குறைந்து 23,071.80 புள்ளிகளில் முடிவடைந்தது. நிப்டியில் அப்போலோ மருத்துவமனை, ஈச்சர் மோட்டார்ஸ், ஸ்ரீராம் நிதி, கோல் இந்தியா, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தன. அதேநேரத்தில் அதானி எண்டர்பிரைசஸ், டிரென்ட், பாரதி ஏர்டெல், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை லாபத்தில் முடிவடைந்தன.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் இந்திய பங்குச்சந்தை சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் ட்ரம்பின் அறிவிப்புகளில் வர்த்தகப் போர் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

டாலர் மதிப்பு உயர்வதால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை தொடர்ந்து விற்று வருகிறார்கள். இதுவும் பங்குச்சந்தையின் தொடர் சரிவுக்குக் காரணமாக இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து