Idhayam Matrimony

பும்ராவுக்கு பதில் இந்திய அணியில் வருண், ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2025      விளையாட்டு
Varun-Chakravarthy-2025-02-

Source: provided

மும்பை : சாம்பியன்ஸ் கோப்பைக்கான  இந்திய அணியில் பும்ராவுக்கு பதில் வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.  

சாம்பியன்ஸ் கோப்பை... 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி. ) சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது.

பும்ரா காயம்...

இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் கடைசி டெஸ்ட் போட்டியின் போது பும்ரா காயமடைந்தார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் கடைசி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் பந்து வீசவில்லை. அதன் பின்னர் அவர் எந்தவித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

காலக்கெடு முடிவு...

பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) சிறப்பு மையத்தில் பும்ராவுக்கு சமீபத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் மருத்துவக் குழுவினர், தேர்வுக்குழு மற்றும் இந்திய அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ மாக எதுவும் தெரிவிக் கப்பட வில்லை. இந்த நிலையில் சாம்பி யன்ஸ் டிராபி போட் டிக்கான வீரர்களின் இறுதி பட்டியலை அறிவிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிகிறது. இதனால் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்பது குறித்த முடிவை இந்திய தேர்வுக் குழுவினர் இன்று அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு?... 

ஒருவேளை ஜஸ்பிரித் பும்ரா உடல் தகுதி இல்லாமல் இடம்பெறாமல் போனால் அவர் இடத்தில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் வேகப்பந்து வீரர் ஹர்ஷித் ராணாவும், பும்ராவுக்கான இடத்தில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து