முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்விளக்கு பழுது: அரசு நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2025      விளையாட்டு
EP 2023-09-25

Source: provided

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 305 ரன் இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது கட்டாக் மைதானத்தில் உள்ள மின்விளக்கு பழுதானது. இதன் காரணமாக ஆட்டம் சுமார் 35 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து விரிவான விளக்கம் அளிக்க ஒடிசா கிரிக்கெட் வாரியத்திற்கு ஒடிசா அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

_____________________________________________________________________________________

அதிக அரைசதம்: ஜோ ரூட் சாதனை

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49.5 ஓவரில் 304 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்னும், பென் டக்கெட் 65 ரன்னும் அடித்தனர். இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் அடித்த அரைசதம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 56-வது அரை சதமாகப் பதிவானது. இதன்மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார். இயன் மோர்கன் 55 அரை சதம் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவரை முந்தி ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார்.

_____________________________________________________________________________________

ஹாட்ரிக் வெற்றி: அயர்லாந்து சாதனை

ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி  முதலாவது மற்றும் ஒற்றை டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.  அயர்லாந்து அணி தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கடந்த 2018-இல் விளையாடியது. இதன் பிறகு 2023-ம் ஆண்டு வரை அயர்லாந்து அணி தொடர்ந்து விளையாடிய ஏழு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து அந்த அணி தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஹாட்ரிக் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை அயர்லாந்து பெற்றுள்ளது. அபு தாபியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய அயர்லாந்து அணி, இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியை 4 விக்கெட்டுகளிலும், மூன்றாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியை 63 ரன்களில் வீழ்த்தியுள்ளது. வெறும் பத்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அயர்லாந்து அணி ஹாட் ட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஹாட் ட்ரிக் வெற்றி பெற்றதே அதிவேக ஹாட் ட்ரிக் சாதனையாக இருந்து வந்தது. 

_____________________________________________________________________________________

இந்திய அணி குறித்து ரணதுங்கா

‘தி டெலிகிராப்’ ஊடக நிறுவனத்துக்கு அர்ஜுனா ரணதுங்கா கூறியதாவது: 90-களின் ஆரம்பத்தில் நான் கேப்டனாக இருந்த போது பேட்டிங் ஆர்டரை ஒரு பேட்டராகப் பார்ப்போம். கவாஸ்கர், வெங்சர்க்கார், மொஹீந்தர் அமர்நாத்.. என அவர்களை வீழ்த்தி விட முடியாது. அசாருதின், சச்சின் டெண்டுல்கர், காம்ப்ளி, திராவிட் அடுத்ததாக வந்தனர். இவர்கள் எல்லாம் எவ்வளவு தரமான வீரர்கள் என்பது உலகறியும்.  இந்திய அணியில் அந்த ‘தரம்’, ‘கிளாஸ்’ இப்போதைய அணியில் இருக்கிறதா? இல்லை என்றுதான் கூறுவேன். இப்போது ஆடும் இந்திய அணியை எனது 1996-ம் ஆண்டு இலங்கை அணி இந்திய மண்ணிலேயே மண்ணைக் கவ்வச் செய்யும். இப்போது ஆடும் வீரர்களை இருமுறை வீழ்த்தி விடுவோம். இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவேன். 

நாம் நம் இளம் தலைமுறை வீரர்களுக்கு முறையான கிரிக்கெட் ஆட்டத்தைப் பயிற்றுவிக்கிறோமா? இலங்கை  வீரர்கள் இப்போது நன்றாகச் சம்பாதிக்கிறார்கள். தனியார் கிரிக்கெட்டில் ஆடுகிறார்கள், நாட்டுக்காக ஆட வேண்டிய தேவையில்லாமல் போய் விட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நாட்டுக்காக ஆடும் மதிப்பு என்பது போயே போய்விடும். அடுத்த 5 ஆண்டுகளில் தனியார் கிரிக்கெட்டை மட்டுமேதான் ஆடுவார்கள். இவ்வாறு கூறினார் அர்ஜுனா ரணதுங்கா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து