Idhayam Matrimony

பிரான்சில் முதல் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி

புதன்கிழமை, 12 பெப்ரவரி 2025      உலகம்
Modi 2024 08 16

Source: provided

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் மெர்சிலி நகரில் முதல் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். பாரிசில் நேற்று முன்தினம் தொடங்கிய சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு பிரதமர் மோடி கலந்துகொண்டார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் மெர்சிலி நகருக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அங்கு மசர்கசிஸ் கல்லறை தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மசர்கசிஸ் கல்லறை தோட்டத்தில் முதல் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களில் 205 பேரின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அங்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை பிரதமர் மோடி சந்திக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து