Idhayam Matrimony

பணய கைதிகள் விவகாரம்: ஹமாசுக்கு நெதன்யாகு மிரட்டல்

புதன்கிழமை, 12 பெப்ரவரி 2025      உலகம்
Benjamin 2023 07-23

Source: provided

ஜெருசலேம் : வருகிற 15-ம் தேதிக்குள் பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஹமாஸ் அமைப்புக்கு நெதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார்.

இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. பணய கைதிகள் 33 பேரில் சிலர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. 6 வார போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 21 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக இதுவரை பாலஸ்தீனியர்கள் 730 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. காசாவில் இன்னும் 76 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக உள்ளதாகவும், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனிடையே, வருகிற 15-ம் தேதி அடுத்தகட்டமாக மேலும் 3 இஸ்ரேலிய பணய கைதிகள் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டிய ஹமாஸ் வருகிற 15-ம் தேதி பணய கைதிகளை விடுதலை செய்யமாட்டோம் என தெரிவித்துள்ளது.

அதேவேளை, வருகிற 15-ம் தேதி அனைத்து பணய கைதிகளையும் ஹமாஸ் விடுதலை செய்யவில்லை என்றால் காசாவில் நரகம் வெடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் பிரதமர் நெதன்யாகு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு வருகிற 15-ம் தேதிக்குள் விடுதலை செய்யவில்லையென்றால் காசாவில் தாக்குதலை மீண்டும் தொடங்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக நெதன்யாகு கூறுகையில், ஹமாஸ் ஆயுதக்குழு வரும் வருகிற 15-ம் தேதி மேலும் சில பணய கைதிகளை விடுதலை செய்யவில்லையென்றால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம். காசாவில் மீண்டும் தாக்குதலை தொடங்க தயாராகும்படி பாதுகாப்புப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்' என்றார். இதன் மூலம் வரும் வருகிற 15-ம் தேதி இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்யவில்லையென்றால் காசாவில் மீண்டும் போர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து