Idhayam Matrimony

தமிழக வீட்டு வசதி வாரியத்தில் நிலம் வாங்கியவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை : அமைச்சர் முத்துசாமி தகவல்

புதன்கிழமை, 12 பெப்ரவரி 2025      தமிழகம்
Muthusamy 2023-07-27

Source: provided

சென்னை : தமிழக வீட்டுவசதி வாரியத்தில் இடம் வாங்கியவர்களுக்கு இடையே உள்ள 40 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட  குழு அமைக்கப்பட்டுள்ளதாக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி வருமாறு., வீட்டுவசதி வாரியம் சார்பாக 40 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஆரம்பகட்டமாக  4(1) நோட்டீஸ் கொடுக்கும் நடவடிக்கை மட்டும் முடிந்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென அரசுக்கு மனுக்கள் வந்தன.

4(1) நோட்டீஸ் கொடுத்த செய்தி மக்களுக்கு தெரியாததால், அந்த இடங்களை பிரித்து சாதாரண மக்களுக்கு விற்பனை செய்துள்ளனர். இதனால் இடம் வாங்கியவர்களுக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும், வீட்டுவசதி வாரியம் நஷ்டம் அடையாமலும் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார்.

இதில் யார் யாருக்கு குறைகள் இருக்கிறது என்பதை தொடர்பாக 16 இடங்களிலே புகார் பெட்டிகள் வைக்கப்பட்டன அதன்  அடிப்படையில் குழு அமைத்து ஆய்வு செய்து  புகார்கள் 5 வகைகளாக பிரிக்கப்பட்டன. இதுதவிர 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை எதிர்காலத்தில் எடுக்கலாம் என்றும் 30 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த நிலங்களுக்கும் இப்போது நோட்டீஸ் கொடுக்கலாம் என்ற நிலை இருந்தது. ஏனென்றால், அந்த நிலங்களும் பிரிக்கப்பட்டு, வீடு கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை முந்தைய திட்டங்களுக்காக எடுக்கப்போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

5 வகையாக பிரிக்கப்பட்ட பிரச்னைகளில், முதல் 2 பிரிவுகளில் வருபவர்களுக்கு வீட்டு வசதி வாரியம் நோட்டீஸ் அளித்துள்ளது. அவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதில் பிரச்னை இல்லை. கோர்ட்டில் வழக்கில் உள்ள பிரச்சினைகள் தனியாக அணுகப்படும். அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கும், அதில் வசிப்பவர்களுக்கும் உள்ள பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளை சரி செய்தால்,முதல் 2 பிரிவு பிரச்னைகள் சரியாகிவிடும்.அடுத்ததாக 3 மற்றும் 4 வகை பிரச்சினைகள் வருகின்றன. அவை, நிலத்திற்கான விலைக்கு ஏற்றபடி வீட்டு வசதி வாரியத்தால் 'அவார்டு" பெற்றவர்களுக்கானது. சில அதை பெற்றுள்ளனர்.சிலர் அதை மறுத்து கோர்ட்டிலும், பலர் வருவாய் துறையிலும் பணத்தை செலுத்தியுள்ளனர். 'அவார்டு' அளிக்கப்பட்ட தகவல் பலருக்கும் தெரியாததால், அதன் உரிமையாளர் பலர் வேறு நபர்களுக்கு விற்றுவிட்டனர். அதில் பலர் அனைத்து அனுமதிகளுடன் வீடுகட்டிவிட்டனர். ஆனால் அதில் வீட்டு வசதி வாரிய நோட்டீஸ் உள்ளது என்பது வாங்கியவர்களுக்கு தெரியவில்லை.

எனவே இதில் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஆலோசனை கூறுவதற்காக ஓய்வு பெற்ற 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் ஏப்ரல் இறுதியில் அவர்கள் தங்களது பரிந்துரைகளை அரசுக்கு சம்ர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும். அதில் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு அவர்கள் செலுத்த வேண்டியதிருக்கும். பணம் செலுத்தியதும் அந்த நோட்டீசில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

5-வது பிரிவின்படி, சிலர் வீட்டுவசதி வாரிய நிலங்களை நீண்ட நாட்களாக ஆக்கிரமித்துள்ளவர்கள் வருகின்றனர். அதில் சிலர் கட்டிடம் கட்டியிருக்கலாம். அதுபோன்ற இடங்களுக்கு வீட்டுவசதி வாரியம் நிர்ணயிக்கும் விலையை அவர்களிடம் கேட்போம். அந்த விலையை செலுத்தி அவர்கள் அதை சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஆக்கிரமிப்பாளர்களுக்கு சலுகை இல்லை. அரசே இதில் முடிவெடுப்பதால் வேறு யாரையும் சம்பந்தப்பட்டவர்கள் அணுக வேண்டாம். இந்த 4 பிரிவுகளிலும் 4 லட்சம் பேர் வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து