Idhayam Matrimony

தே.மு.தி.க. மாநிலங்களவை உறுப்பினர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு: பிரேமலதா

புதன்கிழமை, 12 பெப்ரவரி 2025      தமிழகம்
Premalatha 2024-02-17

Source: provided

சென்னை : அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் போது அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க அ.தி.மு.க. ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது. வருகின்ற ஜூன் மாதத்துடன் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள ம.தி.மு.க. வைகோ, தி.மு.க. திருச்சி சிவா, அ.தி.மு.க. தம்பி துரை, பா.ம.க. அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைகின்றன. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக யாரை தேர்ந்தெடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறும் போதே, தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும், தே.மு.தி.க. தரப்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து