Idhayam Matrimony

ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: 2-வது இடத்திற்கு முன்னேறினார் கில்

புதன்கிழமை, 12 பெப்ரவரி 2025      விளையாட்டு
Subman-Gill 2023-09-06

Source: provided

துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சுப்மன் கில், ரோகித் சர்மாவை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து தொடர்...

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நாக்பூர் (87) மற்றும் கட்டாக் (60) போட்டிகளில் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுப்மன் கில் 781 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், 786 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடிக்க 5 புள்ளிகள்தான் தேவை.

முதலிடத்தில் அசாம்....

நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடினால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு போட்டியில் பாகிஸ்தான் நேற்று தென்ஆப்பிரிக்காவுடன் மோதியது. இந்த போட்டியில் பாபர் அசாம் சிறப்பான விளையாடினால் முதல் இடத்தில நீடிக்க வாய்ப்புள்ளது. 

6-வது இடத்தில் கோலி...

கட்டாக் போட்டியில் சதம் (119) விளாசினாலும் ரோகித் சர்மா 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். அவர் 773 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார். நாக்பூர் போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருந்தார். அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர் 2 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய விராட் கோலி 2 இடங்கள் சரிந்து 6-வது இடத்தை பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் ஒரு இடங்கள் முன்னனேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து