Idhayam Matrimony

ஊழல் குறித்து லோக்பால் அமைப்புக்கு இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2025      இந்தியா
Jitendra-Singh 2023 04 07

புதுடெல்லி, ஊழல் குறித்து லோக்பால் அமைப்புக்கு இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்காக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2013-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 2014-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி அமலுக்கு வந்தது. இந்த நிலையில், லோக்பால் அமைப்புக்கு இதுவரை 2,426 புகார்கள் வந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதில் 2025 ஜனவர் 31 நிலவரப்படி, 2,350 புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

லோக்பால் சட்டத்தின் 3-வது பிரிவின்படி, தலைவர் தவிர, லோக்பாலில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 8-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், அவர்களில் 50 சதவீதம் பேர் நீதித்துறை உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட ஜிதேந்திர சிங், லோக்பால் அமைப்பில் தற்போது தலைவர் தவிர, 6 உறுப்பினர்கள் உள்ளனர் என்றும், அவர்களில் 3 பேர் நீதித்துறை உறுப்பினர்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து