எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி: டில்லியில் இருந்த ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் இடிக்கப்பட்டு, தற்போது ரூ. 150 கோடியில் 13 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் பா.ஜ.க. தலைமையகத்தைவிட மிகப் பெரியதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
டில்லி ஜாண்டேவாலன் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடமாக இருந்த ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி, கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கரோனா பெருந்தொற்றால் கட்டடப் பணிகள் தாமதமான நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.
3.75 ஏக்கர் நிலத்தில், 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், 12 தளங்களுடன் 3 கோபுரங்கள் கொண்ட கட்டடமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் சுமார் 75,000 பேரிடம் நன்கொடையாக பெறப்பட்ட பணத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கட்டடத்தில் அமைந்துள்ள பிரதான கலையரங்கத்துக்கு, அயோத்தி கோயில் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களின் ஒருவரான விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் அமைந்துள்ள நூலகத்தில் 8,500 புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், 5 படுக்கைகள் கொண்ட சிறிய மருத்துவ உதவி மையமும் இந்த கட்டடத்தில் செயல்படவுள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்குவதற்கான இடம் என 300 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை வருகின்ற 19 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத் திறந்துவைக்கவுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


