Idhayam Matrimony

காற்றாலை அமைக்கும் திட்டத்தில் இருந்து அதானி நிறுவனம் விலகல்

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2025      உலகம்
Adani 2024-01-05

Source: provided

கொழும்பு: இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டத்தில் இருந்து மரியாதையுடன் விலகி கொள்வதாக, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

காற்றாலை அமைக்க இலங்கை அரசு மற்றும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இடையே முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியது. இதன் படி, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மன்னார் நகரம் மற்றும் பூநகரியில் இரண்டு காற்றாலை அமைக்க திட்டமிட்டு இருந்தது. அதேபோல், இலங்கையின் மிகப்பெரிய துறைமுகமான கொழும்பில் 700 மில்லியன் டாலர் மதிப்பிலான முனையத் திட்டத்தைக் கட்டுவதிலும் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது.

சில குற்றச்சாட்டுகள் அடிப்படையில், அதானி குழுமத்தின் திட்டங்களை இலங்கை மறுபரிசீலனை செய்ய துவங்கியது. இதற்கிடையே கடந்த மாதம் மின் திட்டச்செலவை குறைக்க, அதானி நிறுவனத்துடன் இலங்கை அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று புதிதாக அமைந்த அரசு அறிவித்தது.

அடுத்தடுத்து சர்ச்சைகள் எழும் நிலையில், இலங்கையில் காற்றாலை அமைக்கும் முடிவை கைவிடுவதாக அதானி நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. இது குறித்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கையில் இரண்டு காற்றாலை அமைக்கும் திட்டம் மற்றும் வினியோக திட்டத்தில் இருந்து மரியாதையுடன் விலகி கொள்கிறோம். இருப்பினும் எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கம் விரும்பினால் இணைந்து பணியாற்ற உறுதி அளிக்கிறோம்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து