எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி: வக்பு சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவின் அறிக்கை பார்லிமென்டின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் ஜனவரி 31ம் தேதி துவங்கியது. அப்போது மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நேற்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், நேற்று (பிப்.,13) காலை 11 மணிக்கு அவை கூடியதும், வக்பு சட்ட திருத்த மசோதா தொடர்பான பார்லி கூட்டுக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கூட்டுக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
மாநிலங்களவையில், பா.ஜ.,எம்.பி., மேதா விஷ்ரம் குல்கர்னி அறிக்கையை தாக்கல் செய்தார். பார்லி கூட்டுக்குழுவின் அறிக்கை மாநிலங்களவையில் ஏற்று கொள்ளப்பட்டது. பின்னர் அவை நடந்தது. இந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷமிட்டனர். அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, மக்களவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


