Idhayam Matrimony

லபுஷேனின் பார்ம் குறித்து ஆரோன் பின்ச் கவலை

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2025      விளையாட்டு
Aaron-Finch-2025-02-13

சிட்னி, ஆஸி. நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேனின்  பார்ம் கவலையளிப்பதாக முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் பேசியுள்ளார்.

தடுமாறும் லபுஷேன்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் தேர்வாகியுள்ளன. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பிப்.19ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. பார்டர் கவாஸ்கர் தொடர், இலங்கை தொடரில் ஆஸி. அசத்தலாக வெற்றி பெற்றது. ஆனால், அதன் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் ரன்களை குவிக்காமல் தடுமாறி வருகிறார். 57 டெஸ்ட் போட்டிகளில் 4,396 ரன்கள் குவித்துள்ளார். 2019இல் அறிமுகமான லபுஷேனின்  பார்ம் கவலையளிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மோசமான அறிகுறி...

இந்த நிலையில் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கூறியதாவது: நம்.3 இடத்துக்கு நான் கேமரூன் கிரீன் அல்லது ஜோஷ் இங்லிஷ் உடன் செல்லுவேன். கடந்த 4 தொடர்களில் லபுஷேனின்  பார்ம் குறித்து கவலையாக இருக்கிறது. இது 2 அல்லது 3 ஆக இருந்தாலும் அவர் அதன் அருகில்தான் இருக்கிறார். ஆனால், அவர் நான்கு தொடர்களில் சரியாக விளையாடாதது என்னைப் பொருத்தவரை மோசமானதற்கான அறிகுறியாகும்.

கேமரூன் கிரீனுக்கு பாராட்டு...

ஜோஷ் இங்லிஷை நான் அணியில் எடுக்க வேண்டுமென நினைக்கிறேன். அல்லது கேமரூன் கிரீன் உடல்நலத்துடன் இருந்தால் அவரை தேர்வு செய்யலாம். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் அவரால் பங்களிப்பை அளிக்க முடியும். மேலும் பேட்டிங் ஆர்டரில் எங்கு வேண்டுமானால் அவரால் இறங்க முடியும் என்றார்.

ஸ்மித், கிளார்க் ஆதரவு...

கிளார்க் கூறியதாவது: டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்காக அவரை தேர்ந்தெடுத்தார்கள். ஒவ்வொரு அணிக்காகவும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அவர் அதிகமாக கவுண்டி கிரிக்கெட் விளையாடியுள்ளார். இங்கிலாந்தில் அதிகமாக விளையாடியுள்ளதால் அவருக்கு அந்த ஆடுகளங்கள் குறித்து நன்றாகத் தெரியும் என்றார். டெஸ்ட்டில் நம்.3இல் விளையாடுவது மிகவும் கடினம். எண்கள் பொய் சொல்லாது. தற்போது, அவர் பார்மில் இல்லை. அவருக்கான கடைசி வாய்ப்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இருக்கும். இறுதிப் போட்டியில் அவர் ரன்கள் குவிக்காவிட்டால் அவருக்குப் பதிலாக வேறு யாரையாவது தேர்வு செய்யலாம் என்றார். ஸ்டீவ் ஸ்மித், “லபுஷேனின்  பார்ம் குறித்து கவலையில்லை, ரன்களை மட்டுமே அடிக்கவில்லை. இருப்பினும் அவர்  பார்மில்தான் இருக்கிறார்” எனக் கூறியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து