எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய கணக்கு அலுவலர், சட்ட அலுவலர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் எஸ்.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்காணல் கொண்டது) பதவிகளில் அடங்கிய கணக்கு அலுவலர், சட்ட அலுவலர் மற்றும் இதர பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 19-ம் தேதி (புதன்கிழமை) டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் தரவரிசை பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு தேதி, நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையை தேர்வர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
இதுகுறித்த சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ள தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து தேர்வர்களும் பணிக்கு தேர்வுசெய்யப்படுவர் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


