Idhayam Matrimony

அ.தி.மு.க. வாக்கு சதவீதம் குறைந்ததா? - முன்னாள் அமைச்சர் சிவபதி மறுப்பு

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2025      தமிழகம்
ADMK 14-2-2025

Source: provided

சென்னை : அ.தி.மு.க. பின்தங்கியதாக கூறப்படும் கருத்துக்கணிப்புகளுக்கு முன்னாள் அமைச்சர் சிவபதி மறுப்பு தெரிவித்துள்ளார்,  

எம்.ஜி.ஆர். இளைஞர் அணியின் மாநில மாவட்ட நிரவாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது, முன்னாள் அமைச்சரும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணியின் செயலாளருமான சிவபதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பா,வளர்மதி, டாக்டர் விஜயபாஸ்கர், கோகுல இந்திரா , கரூர் சின்னசாமி ,வைகைச்செல்வன் அண்ணாதொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் , அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை நலத்திட்டங்கள் மற்றும் அன்னதானங்கள் அளித்து சிறப்பாக கொண்டாடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, மேலும்  எதிரிகள் துரோகிகளிடமிருந்து  கட்சியை காப்பாற்றி, உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்திய எடப்பாடிக்கு நன்றி தெரிவிப்பதென கூட்டத்தில் மற்றொரு தீரமானம் நிறைவேற்றப்பட்டது

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவபதி, அண்மையில்  வெளியாகியுள்ளதாக கூறப்படும் கருத்துக்கணிப்புகளில் திமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக  கூறப்படுகிறது, அது கருத்துக்கணிப்பல்ல: கருத்துத்திணிப்பு. 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வே வெற்றிபெறும் என்று அவர் தெரிவித்தார், 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து