Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் பிரச்சினை: ராமேசுவரத்தில் தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2025      தமிழகம்
DMK-Offces 2023 03 31

Source: provided

ராமேசுவரம் : இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தி.மு.க.  சார்பாக  நாளை (பிப்.16-ம் தேதி), ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இலங்கை கடற்படையினரால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு 88 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நாளை (பிப்.16) ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே தி.மு.க.  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க.  துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை வகிக்கிறார். தி.மு.க. வைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏ.க்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து