எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : பெங்களூரில் ஏரோ இந்தியா 2025 என்ற விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை என இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் கடந்த 10-ந்தேதி தொடங்கிய 'ஏரோ இந்தியா' நிகழ்ச்சி இன்று நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளான இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், ரஷியாவை சேர்ந்த Su-57 விமானம், அமெரிக்காவின் F-16 விமானம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் எல்.யூ.எச்., எச்.டி.டி.-40, எல்.சி.ஏ. எம்.கே.-1ஏ.மற்றும் ஐ.ஜெ.டி. ஆகிய விமானங்கள், இந்திய விமானப்படையின் எஸ்.யூ.-30 எம்.கே.ஐ. விமானம் ஆகியவை இடம்பெற்றன.
'ஏரோ இந்தியா 2025' நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள், ராணுவ தளபதிகள் உள்பட 84 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அரசு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த ஆண்டு 782 இந்தியர்கள் உட்பட 931 கண்காட்சியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் 58 அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (OEM) மற்றும் 115 உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


