Idhayam Matrimony

தி.மு.க.வுக்கு நாளுக்கு நாள் பின்னடைவு: முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேட்டி

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      தமிழகம்
Vaigai-Selvan 15-02-2025

Source: provided

சென்னை : தி.மு.க. அரசு மீது நாளுக்கு நாள் மக்கள் அதிருப்தி அடைந்து வருவதால் 2026 ஆம் ஆண்டு அதி.மு.க. ஆட்சி மலர்வது உறுதியாகி இருப்பதாக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை ஒட்டி, தமிழக முழுவதும் கருத்தரங்கங்கள், பட்டிமன்றங்களை நடத்தி தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆற்றிய அரும் பணிகளை நாட்டு மக்களிடையே கொண்டு செல்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இதில் அதி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பா வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட நிர்வாகிகள் இலக்கிய அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். 

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன், தமிழகத்தில் தி.மு.க. அரசு மீது மக்களுக்கு நாளுக்கு நாள் அதிருப்தி அதிகரித்துக் கொண்டே செல்வதால் 2026 ஆம் ஆண்டு அதி.மு.க. ஆட்சி மலர்ந்து, தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி கே பழனிச்சாமி பொறுப்பேற்பார் என்று தெரிவித்தார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரிட்டது போலவும், ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஏற்பட்டது போலவும், தமிழகத்தில் தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிவித்தார்.

அதி.மு.க.வுக்கு நாளுக்கு நாள் மக்கள் மன்றத்தில் ஆதரவு பெருகி வருவதாகவும் அவர் கூறினார். பின்னர் இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்கள் ராயபுரம் மனோ, வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து