எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : நாங்கள் சிறப்பாக வாக்களிக்கிறோம், எங்களின் ஜனநாயகத்தின் திசை குறித்த நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், நார்வே பிரதமர், வார்சா மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட குழு விவாதத்தில் நேற்று முன்தினம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, மேற்கத்திய ஜனநாயகம் குறித்து கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெய்சங்கர், "ஒப்பீட்டு அளவில் அவநம்பிக்கையாளர்கள் இருக்கும் இக்குழுவில் எனக்கு இடம் இல்லையென்றாலும், ஒரு நம்பிக்கையாளனாக இங்கு நான் உள்ளேன். என்னுடைய விரலை உயர்த்திக் காட்டுவதில் இருந்து தொடங்கலாம் என நினைக்கிறேன். அதில் என்னுடைய நகத்தில் நீங்கள் பார்க்கும் மை குறி தேர்தலில் வாக்களித்ததன் அடையாளம். என்னுடைய மாநிலத்தில் (டெல்லி) சமீபத்தில் தேர்தல் நடந்தது.
கடந்த ஆண்டு எங்களுடைய நாட்டில் தேசிய அளவில் தேர்தல் நடந்தது. தேசிய அளவில் தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்களில் 70 கோடி பேர் வாக்களித்தனர். அனைத்து வாக்குகளையும் ஒரே நாளில் எண்ணுகிறோம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது யாரும் அதனை எதிர்ப்பதில்லை. நாங்கள் சிறப்பாக வாக்களிக்கிறோம், எங்களின் ஜனநாயகத்தின் திசை குறித்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். எனவே எனது முதல் செய்தி என்னவென்றால், உலக அளவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என நீங்கள் கூறுகிறீர்கள். மன்னித்துவிடுங்கள். நான் இதிலிருந்து மாறுபடுகிறேன்.
ஜனநாயகம் உங்கள் மேஜைக்கு உணவினைக் கொண்டுவராது என்று அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கூறினார். உண்மையில் இன்று நாங்கள் ஜனநாயக சமூகமாக இருப்பதால், நாங்கள் 80 கோடி மக்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவினையும், உணவினையும் வழங்குகிறோம். அது அவர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள், அவர்களின் வயிறு எவ்வளவு நிரம்பியுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


