Idhayam Matrimony

வேலூரில் அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை லட்சிய மாநாடு : எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2025      தமிழகம்
EPS 2023-02-23

Source: provided

வேலூர் : வேலூரில் நடந்த .தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை லட்சிய மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.

அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை வேலூர் மண்டலம் சார்பில் லட்சிய மாநாடு வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து ரெயில் மூலம் காட்பாடிக்கு வந்தார். அங்கு அவருக்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்பு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் அ.தி.மு.க.  இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை லட்சிய மாநாட்டிற்கு வந்தார்.

மாநாட்டிற்கு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தலைமை தாங்கினார். பாசறை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வரவேற்றார். கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றினார்.

மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநாட்டையொட்டி வேலூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கட்சி கொடிகள் கட்டப்பட்டு வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. பிரம்மாண்ட மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு, மாநாட்டு வளாகத்திற்குள் தலைவர்களின் மின்விளக்கு கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து