எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ளும் ஜெய் அப்பா சத்யராஜுக்கு பயந்து மனைவியுடன் வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார்.. அங்கு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இதை அறிந்த சத்யராஜ் அவர்களை ஊருக்கு வரச் சொல்கிறார். அதே போல், வெளிநாட்டில் உள்ள யோகி பாபு சாய் தன்யாவுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. இதையறிந்த அவரது அப்பா இளவரசு கோபத்தை மறந்து மகனை வீட்டுக்கு வரச் சொல்கிறார். இந்த இரு தம்பதியினரும் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் அவர்களது குழந்தைகள் மாறிவிடுகிறது. குழந்தைகள் மாறியது தெரியாமல் உண்மையை அறிந்து பதறுகிறார்கள். ஆண் வாரிசுக்காகவும், பெண் வாரிசுக்காகவும் காத்திருந்த அவர்களது குடும்பத்தில் எப்படிப்பட்ட குழப்பங்கள் ஏற்படுகிறது, அதை அவர்கள் எப்படி சமாளிக்கிறார் என்பதை கலகலப்பாக சொல்ல முயற்சித்திருக்கும் படமே பேபி & பேபி. ஜெய் தனது சிறந்த நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். படம் முழுவதும் வரும் யோகி பாபு சிரிக்க வைக்க முயற்சித்திரக்கிறார். நாயகிகளாக நடித்திருக்கும் பிரக்யா நாக்ரா மற்றும் சாய் தன்யா இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சத்யராஜ் இளவரசு ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ் உள்ளிட்ட அனைவரும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. எழுதி இயக்கியிருக்கும் பிரதாப், பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன், காமெடியை மட்டுமே நம்பி பயணித்திருக்கிறார். மொத்தத்தில், பேபி & பேபி ஒரு முறை பார்க்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


