முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகனிடம் முதல்வர் நலம் விசாரித்தார்

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஅமைச்சர் துரைமுருகனிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

தமிழக அமைச்சர்களில் அதிக அரசியல் அனுபவம் கொண்டவராகவும், எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு நகைச்சுவையாகவும் அதேவேளையில் அதிரடியாக பதிலடி கொடுப்பதில் மூத்தவரான அமைச்சர் துரைமுருகன் (86) காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவால், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் சளித் தொல்லையால் அனுமதிக்கப்பட்ட துரைமுருகனுக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைமுருகனை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதையடுத்து துரைமுருகன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து