எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடில்லி, சீனா உடனான மோதல்போக்கை இந்தியா கைவிட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகத்துக்கு சாம் பிட்ரோடா அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முதல் நாளில் இருந்தே சீனாவை எதிரியாகக் கருதும் போக்கை இந்தியா கைவிட வேண்டும் என நினைக்கிறேன். இது சீனாவுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பொருந்தும். சீனாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல் என்ன என்பது தெரியவில்லை. எதிரியை வரையறை செய்யும் பழக்கம் அமெரிக்காவுக்கு மட்டுமே உண்டு. அனைத்து நாடுகளும் ஒன்றிணையும் நேரம் நிச்சயம் வரும். கற்றுக்கொள்வதற்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் கூட்டு நடவடிக்கைகளுக்கும் நேரம் வரும்.
சீனா நம் அண்டை நாடாக இருப்பதோடு மட்டுமல்லாமல், வளர்ந்து வருகிறது. அதனை அங்கீகரித்து நாம் மதிக்க வேண்டும். எனக் குறிப்பிட்டார்.
சீனாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான சாம் பிட்ரோடாவின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் மற்ற மேம்பாடுகளையும் குறிப்பிட்டு மக்களவையில் ராகுல் காந்தி பேசியிருந்ததைக் குறிப்பிட்டு பா.ஜ.க.வினர் விமர்சித்து வருகின்றனர். சாம் பிட்ரோடாவின் கருத்தைக் குறிப்பிட்டு, சீனாவைக் கண்டு ராகுல் அச்சப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை என பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
முன்னதாக நிறப் பாகுபாடு குறித்து சாம் பிட்ரோடா பேசிய கருத்து சர்ச்சையானது. நாட்டில் கிழக்கு பகுதியிலுள்ள மக்கள் சீனர்களைப் போலவும், மேற்கு பகுதியிலுள்ள மக்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கிலுள்ள மக்கள் கிட்டத்தட்ட வெள்ளையர்களைப் போலவும் தென்பகுதி மக்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


