எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி, அரசியல் கட்சியில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் கிடையாது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அவருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உரசல்கள் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தொகுதி வாரியக பூத் கமிட்டி அமைப்பது, கட்சியின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது முதலிய பணிகளை மேற்கொள்ள அ.தி.மு.க.வில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக அமைந்துள்ள 82 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அ.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையனின் பெயர் இடம் பெறவில்லை. இது விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்த சூழலில் திருச்சியில் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதியான அந்தியூரில், சில துரோகிகளால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்று சொல்லி இருந்தேன். அந்தியூர் தொகுதியை பற்றி மட்டும்தான் குறிப்பிட்டுப் பேசினேன். அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் வெளிப்படையாகவே சிலர் எதிராக வேலை செய்தார்கள்.
அரசியல் கட்சியில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் கிடையாது. அமைதியாக அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் நல்லது. கட்சி வழக்குகள் தொடர்பான கேள்விகளுக்கு சி.வி.சண்முகம் பதிலளிப்பார். நாங்கள் பதிலளிப்பது இல்லை. கூட்டணி தொடர்பான கேள்விகளை பொதுச்செயலாளரிடம் கேட்க வேண்டும். நான் சாதாரண தொண்டன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


