Idhayam Matrimony

மார்ச் 14-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2025      தமிழகம்
Tamilnadu 2024-12-21

Source: provided

சென்னை: 2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 14-ல் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 6-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், அன்றைய கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றாலும், சபாநாயகர் தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11-ம் தேதி வரை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்வரின் பதில் உரையும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, தமிழக சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான மார்ச் மாதம் 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் மு.அப்பாவு வெளியிட்டார். அன்று காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுவார். அவரது உரை சுமார் ஒன்றரை மணி நேரம் இடம்பெறும் என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு (2026) தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான். எனவே, இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் பல இடம்பெறும் என்று தெரிகிறது.மார்ச் 15-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 2021-ம் ஆண்டு தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், 5-வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது.

இந்த பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். தொடர்ந்து, 17-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும். அந்த வாரம் இறுதி வரை பட்ஜெட் மீதான விவாதமும், இரு அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெறும். தொடர்ந்து, துறைகள் ரீதியான மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெறும் என்று தெரிகிறது. ஏப்ரல் மாதம் இறுதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து