Idhayam Matrimony

வங்காள தேசத்திற்கு திரும்பி வருவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால்

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2025      உலகம்
Sheik-Hasina 2024 08 11

Source: provided

டாக்கா : வங்காளதேசத்துக்கு மீண்டும் வருவேன்  பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வேன் என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால் விடுத்துள்ளார்.

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு, மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்தியாவில் தங்கி உள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என வங்காளதேசஅரசு கோரிக்கை விடுத்து இருந்தது. எனினும் இது தொடர்பாக இந்தியா எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிளில் காணொலி வாயிலாக அவர் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், வங்காளதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா உரையாற்றியதாவது:-

நான் திரும்பி வருவேன். அதனால் தான் அல்லா என்னை உயிருடன் வைத்து இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வேன். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் நான் உதவி செய்வேன். போராட்டத்தின் போது மக்களை கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெறுவதை உறுதி செய்வேன். முகமது யூனுஸ் ஆட்சி செய்ய தகுதியற்றவர். கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு யூனுஸின் ஆட்சியின் கீழ் நீதி கிடைக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து