எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தென் அமெரிக்க : பொலிவியாவில் மலைப்பாதையில் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் மலைப்பாதையில் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யோகல்லா மாகாணத்தின் தென்மேற்கு மாவட்டத்திலுள்ள போடோசி மற்றும் ஓரூரோ ஆகிய நகரங்களுக்கு இடையிலுள்ள மலைப்பாதையில் நேற்றுமுன்தினம் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மலையிலிருந்து கீழே கவிழ்ந்தது. சுமார் 800 மீட்டர் (2,625 அடி) ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்த அந்த பேருந்தில் பயணித்த 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், மலைப்பாதையில் அதிவேகமாக ஓட்டப்பட்ட அந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்தாண்டு (2025) துவங்கியதிலிருந்து தென் அமெரிக்காவில் ஏற்பட்ட அதிபயங்கரமான சாலை விபத்து இதுதான் என நம்பப்படுகிறது. முன்னதாக, பொலிவியா நாட்டில் அதிகளவிலான அபாயகரமான சாலைகள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் ஏராளமான விபத்துச் சமபவங்கள் அங்கு தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் போடோசி நகரத்திற்கு அருகில் நிகழ்ந்த ஓர் பேருந்து விபத்தில் 19 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


