எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னையில் 'பிங்க் ஆட்டோ' திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 'பிங்க் ஆட்டோ' திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
அதன்படி, சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் முதற்கட்டமாக 250 ஆட்டோக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. அடுத்த மாதம் முதல் பிங்க் ஆட்டோக்கள் இயக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும், பெண்கள் மட்டும் தான் ஓட்டுநராக இருக்க வேண்டும், அவர்கள் பிங்க் நிறத்தில் சீருடை அணிந்திருக்க வேண்டும். ஆட்டோவில் ஜி.பி.எஸ் மற்றும் வாகனம் இருக்கும் இடத்தைக் கண்டறியும் சாதனம் உள்ளிட்டவை இருக்க வேண்டும்' உள்ளிட்ட விதிகள் இதுகுறித்த ஆணையில் இடம்பெற்றுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


