Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வெல்லும்: மைக்கேல் கிளார்க் கணிப்பு

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2025      விளையாட்டு
India 2024-02-05

Source: provided

சிட்னி : சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணியே வெல்லும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்  தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி... 

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் - நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளவிருக்கிறது.

நல்ல பார்மில்... 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி அதே வேட்கையுடன் துபைக்குச் சென்றுள்ளது. மேலும் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா சதமும், துணை கேப்டன் கில் சதம், 2 அரைசதமும், கோலி, ஸ்ரேயாஸ் என அனைவரும் நல்ல பார்மில் உள்ளனர்.

இந்திய அணி வெல்லும்...

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி மூன்றாவது முறையாக வெல்லும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லப் போகிறது. மேலும், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கப் போகிறார்.

முக்கியமான நபர்...

கடந்த பல மாதங்களாக சரியான பார்மில் இல்லாத கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் ரன்களைக் குவிப்பது நல்லதுதான். அவர் அணியில் மிக முக்கியமான நபராக இருப்பார் என்றுதான் தோன்றுகிறது. பந்துவீச்சில் இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் முதலிடத்தைப் பிடிப்பார். மேலும், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தொடர் நாயகன் விருதை வெல்லுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அவர் ஐ.பி.எல்.லிலும் நன்றாக விளையாடிவருகிறார்” என்றார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் உள்பட 481 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து