Idhayam Matrimony

இஸ்ரேலிய பணய கைதிகளை ஒரேகட்டமாக விடுதலை செய்ய ஹமாஸ் அமைப்பு நிபந்தனை

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2025      உலகம்
Gaza-2025-02-09

Source: provided

காசா : காசா முனையில் இருந்து இஸ்ரேல் படையினர் முழுமையாக வெளியேற்றினால் இஸ்ரேலிய பணய கைதிகளை ஒரேகட்டமாக விடுதலை செய்வோம் என்று ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. பணய கைதிகள் 33 பேரில் சிலர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

6 வார போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 24 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக இதுவரை பாலஸ்தீனியர்கள் 1,133 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. காசாவில் இன்னும் 73 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக உள்ளதாகவும், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதேவேளை, தங்கள் பிடியில் உள்ள பணய கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடல்களை ஹமாஸ் ஆயுதக்குழு நாளை இஸ்ரேலிடம் ஒப்படைக்கிறது. அதில், 4 வயது குழந்தை ஏரியல், 9 மாத கைக்குழந்தை கிபிர் மற்றும் இந்த குழந்தைகளின் தாயார் ஷிரி பிபஸ் ஆகியோரின் உடல்களும் அடக்கம். இதனை தொடர்ந்து வரும் சனிக்கிழமை இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 6 பேரை விடுதலை செய்வதாக ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலிய பணய கைதிகள் அனைவரையும் ஒரேகட்டமாக விடுதலை செய்ய தயார் என்று ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது. பணய கைதிகள் அனைவரையும் ஒரேகட்டமாக விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் அதற்கு ஈடாக காசாவில் நிரந்தரமாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டுமென ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசா முனையில் இருந்து இஸ்ரேல் படையினர் முழுமையாக வெளியேற வேண்டும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. அதேவேளை, பணய கைதிகள் மீட்பு, காசா முனையில் இருந்து ஹமாஸ் ஆயுதக்குழுவை முழுமையாக அகற்றுவதே போரின் நோக்கம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து