Idhayam Matrimony

ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை: சுப்மன் கில் முதல் இடம்

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2025      விளையாட்டு
Subman-Gill 2023 07 31

Source: provided

துபாய் : சர்வதேச கிரிக்கெட் கமிட்டி (ICC) வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி இந்திய தொடக்க வீரர் சுப்மன் கில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

796 புள்ளிகளுடன்... 

கடந்த வாரம் வெளியிடப்பட்ட தரவரிசையின்போது சுப்மன் கில் 2-வது இடம் பிடித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் சதம் விளாசியதன் மூலம் தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுப்மன் கில் 796 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் பாபர் அசாம் சிறப்பான விளையாடவில்லை. இதனால் 776 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

761 புள்ளிகளுடன்... 

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா கடந்த வாரம் 3-வது இடத்தில் இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் 761 புள்ளிகளுடன் அதே இடத்தில் நீடிக்கிறார். தென்ஆப்பிரிக்க வீரர் கிளாசன் 756 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 2 இடங்களில் முன்னேறி 740 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

6-வது இடத்தில் கோலி...

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி 727 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் நீடிக்கிறார். ஷ்ரேயாஸ் அய்யர் 679 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். அயர்லாந்து வீரர் டெக்கர் 7-வது இடத்தையும், இலங்கை வீரர் அசலங்கா 8-வது இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து