Idhayam Matrimony

ரஞ்சி கிரிக்கெட் அரையிறுதி: முன்னிலை பெற்றது விதர்பா

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2025      விளையாட்டு
Vidarbha-2025-02-19

Source: provided

நாக்பூர் : ரஞ்சி கிரிக்கெட் அரையிறுதியில் மும்பை அணியை விட முன்னிலை பெற்றது விதர்பா அணி.

அரையிறுதி ஆட்டம்... 

ரஞ்சி கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மும்பை- விதர்பா அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டம் நாக்பூரில் தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்சில் 383 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. யாஷ் ரதோட் 54 ரன்களிலும், அக்ஷய் வாத்கர் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மும்பை தரப்பில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மும்பை பின்னடைவு...

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஆகாஷ் ஆனந்த் நிலைத்து விளையாட மறுமுனையில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் இழந்த வண்ணம் இருந்தது. முன்னணி வீரர்களான ரகானே 18 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே இருவரும் டக் அவுட் ஆனதும் மும்பை அணிக்கு பின்னடைவை கொடுத்தது. 2-வது நாள் ஆட்ட முடிவில் மும்பை 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களுடன் தடுமாறியது. ஆகாஷ் ஆனந்த் 67 ரன்களுடனும், தனுஷ் கோட்டியான் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

3-நாள் ஆட்டம்... 

இதனையடுத்து நேற்று 3-நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகாஷ் ஆனந்த் சதம் விளாசி அசத்தினார். அவர் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 92 ஓவர்களில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 113 ரன்கள் விதர்பா அணி முன்னிலையி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து