Idhayam Matrimony

மோசடி சம்பவங்கள் எதிரொலி: ஒரு மாதத்தில் மட்டும் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2025      இந்தியா
Whatsapp

Source: provided

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தி வரும் சமூக வலைதளங்களில் ஒன்றாக வாட்ஸ்அப் திகழ்கிறது. பயனர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய அப்டேட்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. கூடுதலாக வாட்ஸ்அப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்ட மெட்டா ஏ.ஐ. சாட்டிங் உள்ளிட்ட அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

அதே சமயம், வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மோசடி செயல்களை கட்டுப்படுத்தி, பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, வாட்ஸ்அப் செயலியின் தாய் நிறுவனமான 'மெட்டா', பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை 'மெட்டா' நிறுவனம் முடக்கியுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 4(1)(d) மற்றும் பிரிவு 3A(7) ஆகியவற்றின்படி, இந்தியாவில் சுமார் 80 லட்சத்து 45 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட கணக்குகளில், 1 லட்சத்து 66 ஆயிரம் கணக்குகள் கடுமையான விதிமீறல்கள் காரணமாக உடனடியாக முடக்கம் செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள கணக்குகள் விசாரணைக்கு பின்னர் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து