எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் பகர் ஸமான் விளையாடுவது சந்தேகம் என தெரிகிறது.
பகர் ஸமான் காயம்...
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் (பிப்ரவரி 19) தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பகர் ஸமானுக்கு காயம் ஏற்பட்டது. தசைப்பகுதியில் ஏற்பட்ட வலியின் காரணமாக பகர் ஸமான் கிட்டத்தட்ட ஒரு இன்னிங்ஸ் முழுவதும் பீல்டிங்குக்கு வரவில்லை. தொடக்க ஆட்டக்காரராகவும் அவர் களமிறங்கவில்லை. அவருக்குப் பதிலாக சௌத் ஷகீல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். 4-வது வீரராக களமிறங்கிய பகர் ஸமான் பேட்டிங்கின்போது, மிகுந்த சிரமப்பட்டார். அவர் 41 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.
பெரும் பின்னடைவு...
கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு பகர் ஸமான் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார். தற்போது காயம் காரணமாக மீண்டும் அணியில் இடம்பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் விளையாடவுள்ள நிலையில், பகர் ஸமானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பகர் ஸமானுக்குப் பதிலாக இமாம் உல் ஹக் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


