Idhayam Matrimony

பரிதாபங்களை கூட்டிய சாடிஸ்ட் அரசு; முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் குறைப்பு: : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2025      தமிழகம்
cm 2024-12-03

Source: provided

சென்னை : முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது குறித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 2-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 26 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக ஏ.சி. ரெயில் பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை குறைக்கும் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

சமூக வலைத்தளம் முழுக்க ரெயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்! அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது  சாடிஸ்ட் அரசு. இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து