எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது.
இதனிடையே சாஹல் - தனஸ்ரீ இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்தது. தனஸ்ரீயின் நடவடிக்கைகள் சாஹலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின. ஆனால் 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார். இருப்பினும் விவாகரத்து குறித்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பர விவகாரத்து பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இருவரும் கடந்த 18 மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை நீதிபதி, அவர்களுக்கு அதிகாரபூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


