Idhayam Matrimony

ஹமாஸ் ஒப்படைத்தது இஸ்ரேலிய பெண் பணய கைதியின் சடலம்தான் : உறுதி செய்த குடும்பத்தினர்

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      உலகம்
Hamaz

Source: provided

இஸ்ரேல் : ஹமாஸ் படையினர் ஒப்படைத்தது இஸ்ரெலிய பெண்ணின் சடலம் தான் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் இடையில் கையெழுத்தான காஸா பகுதியின் மீதான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலிடமிருந்து சிறைப்பிடித்துள்ள பாலஸ்தீனர்களின் விடுதலைக்கு பதிலாக ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதன் ஓர் பகுதியாக ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டு அவர்களது கட்டுப்பாட்டில் உயிரிழந்த இஸ்ரேலியர்களான ஷிரி பிபாஸ் (வயது 33) , அவரது இரு குழந்தைகள் மற்றும் ஓடட் லிஃப்ஷிட்ஸ் (84) என்ற ஓய்வு பெற்ற செய்தியாளா் ஆகியோரின் சடலங்கள் சா்வதேச செஞ்சிலுவைச் இயக்கத்திடம் காஸாவின் கான் யூனுஸ் நகரில் கடந்த பிப்.20 அன்று ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், இஸ்ரேலில் நடத்தப்பட்ட சோதனையில் ஷிரி பிபாஸின் உடலைத் தவிர மற்ற மூவரது அடையாளங்களும் உறுதி செய்யப்பட்டது. மேலும், ஷிரி பிபாஸின் உடலுக்கு பதிலாக உயிரிழந்த வேறொரு பாலஸ்தீனப் பெண்ணின் உடலை ஹமாஸ் படையினர் ஒப்படைத்திருப்பதாகக் இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொடூரமான மற்றும் தீங்கிழைக்கும் வகையில் மீறியதாகக் குற்றம் சாட்டியதுடன் இதற்கு அவர்கள் பழிவாங்கப்படுவார்கள் எனவும் அவர் சபதம் செய்தார். 

மேலும், நேற்றுமுன்தினம் ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை இயக்கத்திடம் தாங்கள் ஓப்படைத்தது அப்பெண்ணுடைய சரியான உடல் தான் என்று கூறியிருந்த நிலையில் நேற்று இஸ்ரேலில் நடத்தப்பட்ட அடையாளம் காணும் சோதனையில் ஒப்படைக்கப்பட்ட உடலானது ஷிரி பிபாஸினுடையது தான் என்று அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். இந்த விவகாரங்களுக்கு இடையில் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நேற்று மற்றொரு பிணைக் கைதிகளின் குழுவானது பாலஸ்தீன சிறைவாசிகளுக்கு பதிலாக ஒப்படைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து